Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
George / 2017 ஜனவரி 06 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட நீராவிப்பிட்டி பகுதியில், ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கிவரும் வாரச்சந்தையில், பாடசாலைக்கு செல்லும் வயதிலிருக்கும் சிறுவர்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் உரிய தரப்பினர் இதனை கண்டும் காணாமல் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கிவரும் வாரச்சந்தையில் பல சிறுவர்கள், வியாபாரிகளால் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதை அவதானிக்கமுடிகிறது.
இவ்வாறு சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது சட்டவிரோதமானது என்பதை அறிந்தும் சிலர், இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுட்டுவரும் அதேவைளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கூட இதனை கண்டும்காணாமல் விடுவதையும் அவதானிக்க முடிகிறது.
ஞாயிற்று கிழமைகளில் அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் மூடப்பட்டு மாணவர்கள் அனைவரும் அற நெறி பாடசாலைகளுக்கு கட்டாயம் செல்லவேண்டும் என்ற கட்டுப்பாடும் சட்டமும் நடைமுறையில் இருக்கின்றபோது, அவ்வாறு அறநெறி பாடசாலைகளுக்கு செல்லாது குறித்த மாணவர்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதையும் அவர்களை தொழிலுக்கு ஈடுபடுத்தும் வியாபாரிகள் மீதும் குறித்த அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
19 minute ago
29 minute ago