2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

'மாற்று தொழில் வசதியினை ஏற்படுத்தி தருவதில் பிரதேச செயலகம் அசமந்தம்'

Thipaan   / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

ஆழ் கடல் மீன்பிடி தொழிலில் வசதியினை ஏற்படுத்தித் தருமாறு கரவெட்டி பிரதேச செயலருக்கு பலமுறை எடுத்து கூறிய போதும் அவர் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சிந்தாமணி கடற்றொழில் மீனவர் சங்கத் தலைவர் கந்தன் சோதிலிங்கம் தெரிவித்தார்.

வடமராட்சி வடக்கு சமாசத்தின் கீழ் இயங்கும், சிந்தாமணி மீனவர் சங்கத்தின் பதிவின் கீழ் தொண்டமனாறு கடல் நீரேரியினை நம்பி மீன்பிடியில் ஈடுபட்ட 165க்கு மேற்பட்ட மத்தொனி மீனவ குடும்பங்கள் தற்போது தொழில் இன்றி பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பரம்பரையாக மீன்பிடியில் ஈடுபட்ட நாம் விவசாயத்தில் ஈடுபடமுடியாது. இங்கு பட்டதாரிகள் அதிகம் உள்ளனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வரை மீன்பிடிக்கு செல்லலாம் என்றால் அதுவும் முடியாமல் போய்விட்டது.

'எங்களுக்கு ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கு மாற்று தொழில் தராவிட்டால் இனிவரும் சந்ததியில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு யாருமே இங்கு இருக்கமாட்டார்கள். எங்களுக்கு மாற்று தொழிலினை தரவேண்டும் அல்லது தொண்டமானறு கடல் நீர் இப் பகுதிக்கு வர அனுமதிக்கவேண்டும்.

எங்கள் தொழில் சார்ந்த பிரச்சினைக்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, மாற்று தொழில் வசதியினை ஏற்படுத்தி தர வேண்டும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .