2021 மே 17, திங்கட்கிழமை

டெங்கு ஒழிப்பு தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம்

Super User   / 2011 நவம்பர் 15 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவரத்தினம்)

வவுனியா மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு செயற்பாட்டை முன்னேடுக்கும் நோக்கோடு வவுனியா பகுதியிலுள்ள அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளுக்கான விளக்கமளிக்கும் கூட்டம் இன்று வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்றது.

இதனபோது வவுனியா மாவட்டத்தில் கடந்த ஆண்டு டெங்கு நோயை கட்டுப்படுத்திய விதம் மற்றும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள், பிரதேசங்கள் தொடர்பாக விளக்கம் கொடுக்கப்பட்டது.

எதிர்வரும் வாரங்களில் வவுனியா மாவட்டத்தில் எவ்வாறு டெங்கு நோயை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .