Suganthini Ratnam / 2011 நவம்பர் 21 , மு.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
இந்தியாவிலிருந்து கடந்த 19ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட புனித டொன்பொஸ்கோவின் பரிசுத்த பண்டம் எதிர்வரும்25 ஆம் திகதி மன்னாருக்கு கொண்டுவரப்படவுள்ளது.
எதிர்வரும் 25ஆம் திகதி நண்பகல் ஒரு மணிக்கு மடுச்சந்திக்கு கொண்டுவரப்பட்டு பின் மாலை 2 மணிக்கு மன்னார் முருங்கன் தொன்பொஸ்கோ மண்டபத்தில் வைக்கப்படவுள்ளது.
அன்றையதினம் மாலை 6 மணிக்கு மன்னார் செபஸ்ரியார் பேராலயத்திற்கு கொண்டுவரப்பட்டு இரவு திருவிழிப்பு
நடைபெறவுள்ளது. மறுநாள் 26ஆம் திகதி காலை 06 மணிக்கு செபஸ்ரியார் பேராலயத்தில் திருப்பலி பூஜை நடைபெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து புனித டொன்பொஸ்கோவின் பரிசுத்த பண்டம் அன்றையதினம் முற்பகல் 10 மணிக்கு வவுனியா தூய அந்தோனியார் ஆலயத்திற்கு எடுத்துச்செல்லப்படவுள்ளது.
8 hours ago
9 hours ago
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
21 Jan 2026