2025 ஜூலை 26, சனிக்கிழமை

மாற்றுத் திறனாளிகளின் தொழில் முயற்சிக்கு காணி வழங்குமாறு கோரிக்கை

Super User   / 2013 டிசெம்பர் 19 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, சிலாவத்தை கிராமத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளின் தொழில் முயற்சிக்காக உருவாக்கப்பட்ட அரிசி ஆலைக்கு நிரந்தர காணியொன்றினை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை முல்லைத்தீவு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.சகிலாவினால் விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி அரிசி ஆலை அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் நிதியில் மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது.

எனினும் அரிசி ஆலை அமைக்கப்பட்ட காணியும் கட்டிடமும் தனியார் ஒருவருக்குச் சொந்தமானது என்பதுடன், தற்போது அந்தக் கட்டிடத்தினை உரிமையாளர் தனது சொந்த தேவைகளுக்காக எடுத்துள்ளார்.

இதனால் மேற்படி ஆலை தொடர்ந்து செயற்படமுடியாமல் ஆலையின் உபகரணங்களும், பொருட்களும் கிடப்பில் கிடக்கின்றன. இதனால் அந்தக் கிராமத்திலுள்ள 130 மாற்றுத்திறனாளிகள் தொழில் வாய்ப்புக்கள் இன்றிக் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X