Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Thipaan / 2015 ஏப்ரல் 27 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி ஊரியான் பகுதியிலுள்ள தோட்டக் கொட்டகை ஒன்றிலிருந்து திங்கட்கிழமை (27) காலை வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தார்.
கண்டாவளைப் பகுதியை சேர்ந்த சின்னத்துரை வித்தியானந்ததுரை (வயது 52) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.
இவர் தனது வீட்டிலிருந்து ஊரியான் பகுதியில் அமைந்துள்ள தனது தோட்டக்காணிக்குச் சென்று தோட்ட வேலைகள் செய்பவர்.
வழமைபோல ஞாயிற்றுக்கிழமை (26) மாலை சென்றவர் திங்கட்கிழமை (27) அதிகாலை வரையில் வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து, அவரது உறவினர்கள் தோட்டக் காணிக்குள் சென்று பார்த்த போது, தோட்டத்திலுள்ள கொட்டகைக்குள் அவர் இறந்து கிடந்துள்ளார்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
08 Jul 2025