Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
George / 2015 ஏப்ரல் 27 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி ஹலோ ட்ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தில் பணியாற்றிய சுமார் 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள், இரண்டாவது தடவையாக திங்கட்கிழமை (27) நிறுவனத்தின் கிளிநொச்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சனிக்கிழமை (25) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபபட்டபோதும் அவர்களுக்கான சரியான தீர்வு கிடைக்கவில்லை. இதனையடுத்து திங்கட்கிழமை (27) மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நிதிப்பற்றாக்குறை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் கண்ணிவெடி அகற்றியவர்களில் 200 பணியாளர்களை தவிர ஏனைய 450 பணியாளர்களை, வேலையில் இருந்து நிறுத்தப்போவதாக ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
தங்களில் 300 பேரை முதற்கட்டமாக எவ்வித ஒழுங்குமின்றி படிப்படியாக வேலைநிறுத்தம் செய்துள்ளதாகவும் மிகுதி 150 பேரையும் நிறுத்துவதற்கான நடவடிக்கைளை நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
கையிருப்பில் உள்ள நிதி மூலம் அனைத்து பணியாளர்களுக்கும் ஏக காலத்தில் வேலைவாய்ப்பை வழங்கவேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.
ஆர்ப்பாட்டத்தில் அதிகமானவர்கள் கலந்துகொண்டமையால் பதற்றத்தை குறைக்கும் நோக்கில் ஹெலோ ட்ரஸ்ட் நிறுவனம் முன்பாக பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
08 Jul 2025