2025 ஜூலை 09, புதன்கிழமை

வவுனியா வடக்கு கஷ்டப்பிரதேசமாக பிரகடனம்

Gavitha   / 2015 ஏப்ரல் 30 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

வடமாகாணத்துக்குட்பட்ட வவுனியா வடக்கு கல்வி வலயத்தை கஷ்டப்பிரதேசமாக பிரகடனப்படுத்தும் பிரேரணை வடமாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் வியாழக்கிழமை (30) நடைபெற்றபோது, ஆளுங்கட்சி உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் இந்தப் பிரேரணையை முன்வைத்தார்.

'அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்குக்கு விஜயம் செய்யும் போது, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள கல்வி வலயங்களை கஷ்டப்பிரதேசங்களில் கல்விவலயமாக பிரகடனப்படுத்தினார். அதுபோல வவுனியா வடக்கு கல்வி வலயத்தையும் கஷ்டப்பிரிதேச கல்வி வலயமாக பிரகடனப்படுத்த வேண்டும்' என லிங்கநாதன் பிரேரணை முன்வைத்தார்.

இந்தப் பிரேரணை முன்வைத்ததும் எழுந்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடமாகாணத்தில் சில நடவடிக்கைகளை ஏன் செய்கின்றார் என்பது எங்களுக்கு விளங்கவில்லை. அவரது கட்சி அலுவலகம் திடீரென கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சில நடவடிக்கைகளையும் செய்தார். மக்களே உங்களுக்காக செய்கின்றோம் எங்களுக்குடன் வாருங்கள் என்று அழைப்பது போல அவரது நடவடிக்கை இருக்கின்றது. இது அரசியல் நோக்கமாக இருக்கும் என்று நினைக்கின்றேன் என்றார். இந்தப் பிரேரணையை நான் எதிர்க்கவில்லை. வவுனியா வடக்கு கல்வி வலயம் கஷ்டப்பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படும் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .