2025 ஜூலை 09, புதன்கிழமை

மன்னார் கற்கிடந்த குளம் கிராம பிரதான வீதி புனரமைப்பு பணி ஆரம்பம்

Gavitha   / 2015 மே 02 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் கற்கிடந்த குளம் கிராம பிரதான வீதியை புனரமைக்கும் பணி வெள்ளிக்கிழமை (01) வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மன்னார்-மதவாச்சி ஏ-14 பிரதான வீதியின் கற்கிடந்த குளம் கிராம  சந்தியில் இருந்து கற்கிடந்த குளம் தேவாலயம் வரை செல்லும்   இப்பிராதன வீதியானது, நீண்டகாலமாக புனரமைக்கப்படாது குண்டும் குழியுமாக காணப்படுவதால் அவ்வீதி வழியே பயணிக்கும் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் இக்கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு குறித்த வீதியினை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆரம்பித்து வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .