Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 மே 03 , மு.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19ஆவது திருத்தச்சட்டம் இன்னும் முற்றுப்பெறவில்லை. தேர்தல் மாற்றத்துக்கு பின்னரே அது முற்றுப்பெறும் என்று மின்சக்தி எரிபொருள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்திருப்பது, 19,20ஆவதும் திருத்தச்சட்டங்கள் பற்றி அவருக்கு தெரியாது போன்றே இருக்கின்றது என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னித்தொகுதி அமைப்பாளருமான சட்டத்தரணி ஹூனைஸ் பாறூக் தெரிவித்துள்ளார்.
மன்னார், முசலி சிலாபத்துறை பாடசாலையில் சனிக்கிழமை (02) நடைபெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, பத்திரிகைகளுக்கு 19ஆவது திருத்தச்சட்டம் இன்னும் முடிவடையவில்லை என்று அறிக்கையொன்றை விடுத்திருந்தார்.
ஜனாதிபதிக்கு இருந்து வரும் நிறைவேற்று அதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வருவோம். இந்த அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கும் அமைச்சரவைக்கும் பகிர்ந்து அளிப்போம் என்ற உறுதிப்பாட்டை வழங்கியிருந்தோம். அதற்கமைய 19ஆவது திருத்தச்சட்டம் வெற்றிபெற்றது.
ஆனால் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, தேர்தல் மாற்றத்தைக் கொண்டு வரும் பொழுது தான், 19ஆவது திருத்தச்சட்டம் முடிவுறும் என்று கூறியிருக்கின்றார்.
தேர்தல் மாற்றத்தை உடனடியாக கொண்டு வரும் பொழுது, அது சிறுபான்மை மக்களாக வாழ்கின்ற தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களுக்கு அது ஒரு சவாலாக அமைகின்றது.
ஆகவே, இதை அவசரப்பட்டு கொண்டுவர முனைபவர்கள் ஓர் இனவாதியாக இருக்க வேண்டும் அல்லது அவர்கள் பெரும்பான்மை இனக்கட்சியை பலப்படுத்தும் எண்ணம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
ஆகவே, சிறுபான்மை மக்களுக்குரிய நாடாளுமன்ற அங்கத்துவத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக 20ஆவது திருத்தச்சட்டத்தை நாம் பரிசீலிக்க வேண்டியுள்ளது. அதன்பின்னரே முடிவுக்கு வரக்கூடியதாக உள்ளது.
ஆகவே, அவசரப்பட்டு தேர்தல் மாற்றத்துக்கு நாம் வருவோமானால், கடந்த காலங்களில் தமிழ் பேசும் மக்களது உரிமைகள் எவ்வாறு மறுக்கப்பட்டதோ, அதைவிட மோசமான செயல் நாடாளுமன்றத்தில் சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுக்கும் பிரதிநிதித்துவமும் இல்லாதுபோய்விடும் என்பதை நினைவூட்டுகின்றறேன்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
5 hours ago