2025 ஜூலை 09, புதன்கிழமை

முழங்காவிலில் பப்பாசிச் செய்கை விளைச்சல் அமோகம்

Thipaan   / 2015 மே 03 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன் 

கிளிநொச்சி மாவட்டத்தில் பழப்பயிர் செய்கையை விருத்தி செய்யும் வகையில் முழங்காவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பப்பாசி செய்கை தமக்கு அதிக வருமானம் கிடைக்கும் வகையில் அமைந்துள்ளதாக பப்;பாசி செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகள் தெரிவித்தனர். 

கிளிநொச்சி மாவட்டத்தில் பழப்;பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும்; வகையில் மாவட்ட விவசாயத் திணைக்களத்தினால் ஐ.எல்.ஓ. திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 100 பயனாளிகளுக்கு தலா 170 கன்றுகள் வீதம் வழங்கப்பட்டு பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஆண்டில் நிலவிய கடுமையான வரட்சி காரணமாக குறிப்பிட்ட சில விவசாயிகளின் செய்கைகள் பாதிக்கப்பட்ட போதும் எஞ்சிய செய்கைகள் வெற்றியளித்துள்ளது. 

வாரம் ஒன்றுக்கு 4,000 கிலோ முதல் 6,000 கிலோ வரையான பப்பாசி பழம் அறுவடை செய்யப்;படுகின்றது என விவசாயிகள் கூறினர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .