2025 ஜூலை 09, புதன்கிழமை

பொதுக்காணியை மீட்டுத்தருமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2015 மே 03 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வவுனியா பேயாடிகூழாங்குளத்தில் உள்ள பொதுக்காணியை கிராமத்தின் தேவைக்கே தருமாறு கோரி பேயாடிகூழாங்களம் மக்கள் இன்று காலை (3) பொது காணியின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இக்கிராமத்தில்,  பொது மண்டபம் முன்பள்ளயின்றி கிராம மக்கள் அல்லலுறும் நிலையில் பிரதேச செயலாளர், தமது கிராம பொதுக்காணியை திமறைக்கலாமன்றம் என்ற அமைப்புக்கு கொடுத்துள்ளதாகவும் இவ்வாறான செயலை தாம் கண்டிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை தமது கிராமத்தின் பாடசாலை, ஆலயம், முன்பள்ளி என்பன ஆரம்பத்தில் இருந்தபோதிலும் அதுதற்போது இராணுவ ஆக்கிரமிப்பினுள் உள்ள நிலையில் கிராமத்துக்கென  இருந்த பொதுக்காணியையும் பிரதேச செயலாளர் தன்னிச்சையாக வேறு தேவைக்கு வழங்கியுள்ளார் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பிரதேச செயலளாளர் ஏன் இப்படி நம்பிக்கை துரோகம் செய்தார்? அரை ஏக்கர் பொது காணியை எங்களுக்கே மீட்டுத்தாருங்கள்?, எமக்கு வேறு பொதுக்காணி இல்லை என்ற வாசங்களை எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .