2025 ஜூலை 09, புதன்கிழமை

மன்னார் ஆயரை பார்வையிட வருவதை தவிர்க்கவும்: வைத்தியர்கள்

Princiya Dixci   / 2015 மே 04 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையின் உடல் நலம் தேறிவருவதற்கு உதவியாக பார்வையாளர்களின் வருகை தவிர்க்கப்பட வேண்டுமென வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையை பார்வையிடுவதற்காக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

இதனால் ஆயரின் உடல் நலம் தேறிவருவதற்கு தடங்கல்கள் ஏற்பட்டு வருவதாகவும் மறு அறிவித்தல் வரை பார்வையிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாக குரு முதல்வர் தெரிவித்தார்.

எனவே, வைத்தியசாலைக்கான வருகையை தவிர்த்து மக்கள் அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்வதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .