2025 ஜூலை 09, புதன்கிழமை

10 வயதுச் சிறுவன் கொலை; சந்தேகத்தில் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2015 மே 05 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவில் 10 வயதுச் சிறுவன் ஒருவன்  கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் 18 வயது இளைஞர் ஒருவர்  நேற்று திங்கட்கிழமை   மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியில் கடந்த 9ஆம் திகதி சந்திரசேகரன் சஞ்சய் என்ற 10 வயதுச் சிறுவன் பகல்வேளை வீட்டின் பின்புறமாகவிருந்து சடலமாக மீட்கப்பட்டான். இது தொடர்பாக வவுனியா பொலிஸார்  பல்வேறு கோணங்களில் பலரிடமும் வாக்குமூலங்களை பெற்று விசாரணைகளை நடத்தினர்.    

இந்த நிலையில், இந்தக் கொலையுடன் தொடர்புடையவர் என்று  சந்தேகிக்கப்படும், கொல்லப்பட்ட சிறுவனின் உறவினரான  அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் 18 வயது இளைஞரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கொல்லப்பட்ட சிறுவனின் வீட்டிலிருந்த உண்டியலில்  பணத்தை திருடச் சென்ற சமயம், அதைக் கண்ட சிறுவன் வீட்டாரிடம் கூறப்போவதாக கூறியதை அடுத்து,  அருகில் இருந்த கத்தியை எடுத்து சிறுவனின் கழுத்துப் பகுதியில் அறுத்ததினால் குறித்த சிறுவன் மரணமடைந்துள்ளான்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .