2025 ஜூலை 09, புதன்கிழமை

ஆயருக்காக பிரார்த்திக்கவும்

Kogilavani   / 2015 மே 05 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வைத்தியசாலைக்கான வருகையை தவிர்த்து, ஆயருக்காக பிரார்த்தனை செய்யுமாறு மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் மக்களை கோரியுள்ளார்.

திடீர் சுகவீனமுற்ற நிலையில், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஆயரின் உடல் நிலை இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில் வைத்தியசாலையில் அவருக்கு இடையூறு இல்லாதிருக்க வேண்டும் என வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இந்நிலையிலேயே மறு அறிவித்தல் வரை ஆயரை பார்வையிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அன்ரனி விக்டர் சோசை கோரிக்கை விடுத்துள்ளார்.

வைத்தியசாலைக்கான வருகையை தவிர்த்து மக்கள் ஆயருக்காக பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் அவர் கோரியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .