2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மடுவில் 'சதொச' விற்பனை நிலையம் திறந்து வைப்பு

Princiya Dixci   / 2015 மே 06 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் மடு பிரதேச செயலகப் பிரிவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 'சதொச' விற்பனை நிலையத்தை கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியூதின், செவ்வாய்க்கிழமை (5) திறந்து வைத்தார்.

மடு மாதா ஆலயத்துக்கு வருகை தரும் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களினது நலன் கருதியும் பிரதேச மக்களின் நன்மை கருதியும் அமைச்சர் இந்த விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார்.

கைத்தொழில், வணிகத் துறை அமைச்சின் கீழ் புதிய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட நிறுவனங்களில் 'சதொச' நிறுவனமும் ஒன்றாகும்.

அமைச்சர் றிசாத் பதியூதீனின் பணிப்புரைக்கமைய 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 'சதொச' நிறுவனங்கள் பதுளை, ஹாலி-எல உட்பட பல பிரதேசங்களில் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .