Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Gavitha / 2015 மே 06 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
வடமாகாண சபையின் இறைவரித் திணைக்களம் ஆரம்பிப்பதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் உள்ளிட்ட அனைவருக்கும் இது தொடர்பில் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளதாகவும் விரைவில் இறைவரித் திணைக்களம் இயங்கும் எனவும் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் இறைவரித் திணைக்களம் இயங்காமையால், வடமாகாண சபைக்கு வரவேண்டிய மாதாந்த வருமானம் சுமார் 20 மில்லியன் ரூபாய், மத்திய அரசாங்கத்துக்கு செல்வதாக வடமாகாண சபையின் உறுப்பினர்கள் கூறினர்.
வடமாகாண சபையால் இறைவரித் திணைக்களம் சம்பந்தமான நியதிச்சட்டம் உருவாக்கப்பட்டு உரிய முறையில் அனுமதிக்கப்பட்டு, வடமாகாண ஆளுனரின் ஆனுமதி பெற்று, நிதி அமைச்சுக்கு அனுப்பப்பட்டு சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாகிய போதிலும் இதுவரையில் இறைவரித் திணைக்களம் ஆரம்பிப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக வடமாகாண சபை அவைத்தலைவரிடம், கேட்டபோது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் வடமாகாண சபையின் பிரதம செயலாளர் உட்பட அனைவருக்கும் இது சம்பந்தமான கடிதங்கள் வரையப்பட்டுள்ளன. அனுமதி கிடைத்ததும் பெற்றதும் வடமாகாண சபைக்கான இறைவரித் திணைக்களம் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
நிதி அமைச்சின் முகாமைத்துவ நிறுவனத்தால் வடமாகாண சபையின் இறைவரித் திணைக்களத்தை ஆரம்பிப்பதற்கான அனுமதி வழங்கப்படுவதுடன், இறைவரித் திணைக்களத்துக்கான ஆணையாளர் உட்பட ஏனைய பணியாளர்களை நியமனம் செய்யவும் அனுமதிகள் வழங்கப்படும் சந்தர்ப்பத்திலேயே வடமாகாண சபையின் இறைவரித் திணைக்களம் இயங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
08 Jul 2025