Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
George / 2015 மே 07 , மு.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
பணியிலிருந்து நீக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிளிநொச்சி ஹலோ ட்ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் நிறுவனப் பணியாளர்கள் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனை புதன்கிழமை (06) சந்தித்துக் கலந்துரையாடினர்.
இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிரதேச அலுவலக கட்டத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது
மேற்படி நிறுவனத்தில் பணியாற்றிய பணியாளர்களில் 350க்கு மேற்பட்ட பணியாளர்கள் முன்னறிவித்தல் இன்றி திடீரென பணியிலிருந்து ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் நிறுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்து பணியாளர்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த சந்திப்பில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார்,
கிளிநொச்சி மாவட்டத்தில் இன்னும் பல பிரதேசங்கள், கண்ணிவெடி ஆபத்து உள்ள பிரதேசமாக காணப்படுகின்றன. குறிப்பாக முகமாலை, ஜெயபுரம், கிருஸ்ணபுரம், அறிவியல்நகர் , ஆனைவிழுந்தான் போன்ற பிரதேசங்கள் காணப்படுகின்றன. அரசு நிதி மூலங்களை தேடி குறித்த நிறுவனத்துக்கு வழங்கி கண்ணிவெடி அகற்றும் பணியை தொடர்வதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திடிரென முன்னறிவித்தலின்றி 350க்கு மேற்பட்ட பணியாளர்கள் பணிநிறுத்தம் செய்யும் போது கிளிநொச்சி மாவட்டத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். அந்த குடும்பங்களின் வாழ்வாதாரமும் மிகமோசமாக பாதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் சுவாமிநாதன்,
முன்னறிவித்தல் இன்றி பெருமளவு பணியாளர்கள் நிறுத்தப்படுவது சட்டப் பிரச்சினைக்குரிய விடயம். எனவே ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தினர் பணியாளர்களுடன் சமரசத்துக்குச் செல்ல வேண்டும். தவறின் தொழில் திணைக்களத்தின் ஊடாக சட்ட நடவடிக்கைக்கு சென்றால் நிறுவனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பணியாளர்கள் விடயத்தில் இணக்கப்பாட்டுக்குச் செல்ல வேண்டும் எனக்கூறினார்.
இதன்போது கருத்து தெரிவித்த வடமாகாண தொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் கனேஸ்வரன், ஹலோ ட்ரஸ்ட் நிறுவனப் பணியாளர்களுக்கும் நிறுவனத்துக்கும் இடையில் ஒப்பந்தம் எதிர்வரும் ஜூன் மாதம் வரை உள்ளது என்றார்.
இந்தச் சந்திப்பில், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக மாவட்டச் செயலாளர் ஆர்.சத்தியசீலன், தேசிய கண்ணிவெடி அகற்றும் பிரிவினர், ஹலோ ட்ரஸ்ட் நிறுவன அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago
25 minute ago
33 minute ago