Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Menaka Mookandi / 2015 மே 08 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு கல்வி வலயத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அதிபர் இடமாற்றங்கள் பாரபட்சமின்றி இடம்பெற வேண்டுமென முல்லைத்தீவு மாவட்ட அதிபர்கள் சங்கம் வலயக் கல்விப் பணிமனையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
முல்லைத்தீவு வலயத்திலுள்ள 1 ஏ.பி மற்றும் 1 சி பாடசாலைகளுக்கு தகுதியான அதிபர்களை நியமிப்பதற்கான இடமாற்றங்களை வழங்குவதற்கு முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிமனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.
இந்த நடவடிக்கையில் சில பாரபட்சமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளுக்கான அதிபர்கள் இடமாற்றம் வழங்கும் போது அதில் பாரபட்சமான முடிவுகள் இருக்கக்கூடாது. சிறந்தமுறையில் அதிபர் நியமனங்களை வழங்குவதற்கு வலயக்கல்விப் பணிமனை தகுந்த நடவடிக்கையெடுக்க வேண்டும்.
முல்லைத்தீவு வலயத்தில் ஆறு பாடசாலைகளுக்கு அதிபர்கள் இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை வலயக் கல்விப் பணிமனை மேற்கொண்டுள்ள நிலையிலேயே அப்பணி முழுமையாக இடம்பெறவேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago
22 minute ago
33 minute ago