2025 ஜூலை 09, புதன்கிழமை

பஸ் உரிமையாளர்களின் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்

Gavitha   / 2015 மே 09 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்க பிரதிநிதிகளுக்கும் இலங்கை போக்குவரத்து சபை பிரதிநிதிகளுக்குமிடையில் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் மற்றும் வவுனியா அரசாங்க அதிபர் தலைமையில் சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்றது.

வவுனியா மாவட்டத்தில் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினருக்கும் இ.போ.ச ஊழியர்களுக்குமிடையில் நீண்ட காலமாக நிலவி வந்த நேர சூசி பிரச்சனைகள் மற்றும் புதிதாக அமைக்கப்படும் பஸ் நிலையத்தில் இருந்து இரு சாராரும் சேவையில் ஈடுபடுத்தல் மற்றும் வெளி மாகாண பஸ்கள் இ.போ.ச பஸ் நிலையத்தில் தரித்து செல்வதால் தனியார் பஸ் உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் பிரச்சனைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டிருந்தது.

எதிர்வரும் 11ஆம் திகதி வட மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்தீருந்த நிலையிலேயே, நேற்று வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .