2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்

Thipaan   / 2015 மே 10 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவில் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஊடாக  பெண் தலைமைத்துவ குடும்பங்கள் இரண்டுக்கு  சனிக்கிழமை (09) வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

வவுனியா ஈஸ்வரிபுரத்தில் வசிக்கும் இரு பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திரன் இந்திரகுமாரால்  70,000 ரூபாய் பெறுமதியான ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டன.

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின் போது செல் வீச்சில்  கணவன் முத்துசாமியை இழந்து ஒரு பெண் பிள்ளையுடன் உதவிகள் இன்றி வறுமையில் வாழ்ந்த துஸ்யந்திக்கு 32,000 ரூபாய் பெறுமதியான 4 ஆடுகள் வழங்கிவைக்கப்பட்டன.

கணவன் ரவி புற்றுநோயால் இறந்து விட 3 பெண் பிள்ளைகளுடன், உதவிகள் ஏதும் இன்றி வாழ்ந்த புஸ்பகுமாரிக்கு  38,000 ரூபாய் பெறுமதியான 5 ஆடுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஊடாக இடம்பெற்ற இவ் உதவி வழங்கும் நிகழ்வில் அமைப்பின் தலைவர் எஸ். சந்திரகுமார், செயலளார் மாணிக்கம் ஜெகன் உட்பட உதவி வழங்கியோரும் பங்கேற்றிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .