2025 ஜூலை 09, புதன்கிழமை

நீராவிப்பிட்டி மீனவர்கள்-அமைச்சர் ரிஷாட் சந்திப்பு

Gavitha   / 2015 மே 10 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு நீராவிப்பிட்டி மீனவர் சங்கத்தினருக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் இடையிலான விஷேட சந்திப்பொன்று சனிக்கிழமை (09)  இடம்பெற்றது.

முல்லைத்தீவுக்கு சனிக்கிழமை விஜயம் மேற்கொண்ட அமைச்சரை சந்தித்துக் கலந்துரையாடிய நீராவிப்பிட்டி மீனவர் சங்க பிரதிநிதிகள்,  தாம் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

இதன்போது, முல்லைத்தீவு நந்திக்கடலில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி தொழில் செய்வதை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மீனவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இவ்வாறு தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி தொழில் செய்வதனால், நந்திக்கடலில் தொழில் செய்யும் மீனவர்கள் பொருளாதார ரீதியில் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் மீனவர்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.

நந்திக்கடலில் சட்டவிரோத மீன்பிடித்தொழிலை மேற்கொள்ளும் மீனவர்கள் கடற்தொழில் திணைக்களம், பொலிஸார், மீனவ சங்கங்களின் உதவியுடன் பிடிக்கப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் தொடர்ச்சியாக தடைசெய்யப்பட்ட வலைகளைப்பயன்படுத்தி வருவதாகவும் மீனவர்கள் அமைச்சரிடம் குறிப்பிட்டனர்.

அத்துடன், தமது பிரச்சினைகள் கோரிக்கைகள் உள்ளடங்கிய மகஜரொன்றையும் குறித்த மீனவர்கள் அமைச்சரிடம் கையளித்தனர்.

மீனவர்கள் முன்வைத்த பிரச்சினைக் தொடர்பில் உரிய அவதானம் செலுத்துவதுடன், இதுதொடர்பில் கடற்றொழில் அமைச்சருடன் நேரடியாக கலந்துரையாடுவதாகவும் இதன்போது அமைச்சர் தெரிவித்திருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .