Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 மே 11 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா விவசாயக்கல்லூரியில் விரிவுரையாளர்கள் பற்றாக்குறையாக உள்ளதால் விரிவுரைகள் சீராக இடம்பெறுவதில்லை. இதனால், கற்கைகளை தொடர்வதில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்வதுடன், பூரணத்துவமான பயிற்சியை நிறைவுசெய்யாத டிப்ளோமாதாரிகளாகவே வெளியேறவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் வவுனியா விவசாயக்கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் வவுனியா விவசாயக்கல்லூரி மாணவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'பேராதனை விவசாய திணைக்களத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் எமது விவசாயக்கல்லூரி இயங்குகின்றது. இலங்கையின் விவசாயத்தை மேம்படுத்த அரசினால் பல்வேறு விதமான அபிவிருத்திகள் மற்றும் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு, இலங்கையின் விவசாயத்துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. இருந்தபோதிலும், தமிழ்மொழி மூலமான விவசாயக்கல்லூரியில் விவசாயக் கல்வியை தொடரும் நாம் வெகுவாக புறக்கணிக்கப்படுவதாக உணர்கின்றோம்.
எமது கல்லூரிக்கான நிரந்தர விரிவுரையாளர்களை வழங்குவதில் காட்டப்படும் அசமந்தப்போக்கினால் நாம் தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றோம்.
இங்கு முதலாம், இரண்டாம் வருட மாணவர்களுக்கான இருபது வரையான பாடநெறிகள் உள்ளன. நிரந்தர நியமனம் பெற்ற நான்கு விரிவுரையாளர்கள் உள்ளனர். இந்நிலையில், இலங்கையில் எங்கும் இல்லாத வகையில் ஒரு விரிவுரையாளருக்கு என்று குறித்து ஒதுக்கப்படுகின்ற நேரத்துக்கு மேலதிகமாக விரிவுரையாளர்களினால் விரிவுரைகள் நடத்தப்படவேண்டிய நிலைமை இங்கு உருவாகியுள்ளது. இதனால், எந்தவொரு கற்கைகளையும் பூரணத்துவமாக குறித்த காலத்தில் முடிவுறுத்தமுடியாத நிலைமை உள்ளது. இந்நிலையே கடந்த தசாப்தகாலமாக நீடிக்கின்றது.
இதேவேளை, இலங்கையில் காணப்படும் ஏனைய நான்கு விவசாயக்கல்லூரிகளிலும் சிங்களமொழி மூலமான பாடநெறிகளுக்கு போதியளவில் விரிவுரையாளர்கள் உள்ளனர். தனியாக தமிழ்மொழி மூலமான மாணவர்களை மாத்திரம் கொண்ட வவுனியா விவசாயக்கல்லூரிக்கு என்று நிரந்தரமான விரிவுரையாளர்களை நியமிப்பதில் அசமந்தப்போக்கு காணப்படுகின்றது.
மேலும், விரிவுரையாளர்களை கோரும்போது ஒப்பந்த அடிப்படையில் விரிவுரையாளர்கள் இணைக்கப்படுவதால்;, வௌ;வேறு நிரந்தர நியமனங்களுடன் அவர்கள் வெளியேறுவது தொடர்கதையாக உள்ளது. ஒப்பந்த அடிப்படையில் இணைக்கப்பட்ட விரிவுரையாளர்களால் தொடரப்பட்ட பாடநெறிகள் வேறு விரிவுரையாளர்களிடம் பாரப்படுத்தப்படுவதால் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
ஒப்பந்த அடிப்படையில் வருகைதந்து வெளியேறிய விரிவுரையாளர்கள் மேற்கொள்ளப்பட்ட செய்முறைகளை தெளிவாக முடிவுசெய்ய முடியாமை.
விரிவுரையாளர் மாற்றத்தினால் ஏற்படும் உளத்தாக்கத்துக்கு உள்ளாகுதல்.
குறித்த காலப்பகுதியில் பாடநெறியை பூர்;த்தி செய்யமுடியாமை.
போதியளவான களப்பயிற்;சியை பெற முடியாதுள்ளமை.
தொடர் மதிப்பீட்டு பரீட்சைகள் தொடர்பான சிக்கல்கள் போன்ற இதர பிரச்சினைகளையும் சந்திக்கின்றோம்.
இவ்வாறாக எம்மால் அறியப்படும் வகையில் கடந்த வருடத்தில், அதற்கு முன் ஒப்பந்த அடிப்படையில் வருகைதந்த இரு விரிவுரையாளர்கள் இடைநடுவில் நிரந்தர நியமனம் பெற்றுச்சென்றனர்.
தற்போது எட்டு ஒப்பந்த அடிப்படையிலான விரிவுரையாளர்கள் வருகைதருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு, அதற்கமைய எமக்கு பாட நேரசூசி தரப்பட்டபோதும், ஐந்து விரிவுரையாளர்களே வருகைதந்தனர். அவர்களில் இருவர் வேறு நிரந்தர நியமனம் கிடைத்து வெளியேற, மிகுதியாக மூன்று ஒப்பந்த அடிப்படையிலான விரிவுரையாளர்களே தற்போதுள்ளனர்.
வருகை நிலை விரிவுரையாளர்களாலும் சில விரிவுரைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பூரண களப்பயிற்சியை பெறமுடியாதுள்ளதுடன், முறையான விரிவுரைகளை எதிர்பார்க்க முடியாதுள்ளது. அத்துடன், வருகை நிலை விரிவுரையாளர்களினால் மேற்கொள்ளப்படும் விரிவுரைகள் கிழமை நாட்களில் இடம்பெறாது சனி, ஞாயிறு தினங்களிலும் விடுமுறை நாட்களிலும் இடம்பெறுவதால் விடுமுறைகள் இன்றி தொடர்ந்து மனவிரக்தியுடன் கற்றலை தொடரவேண்டிய கசப்பான அனுபவங்களை சந்திக்கின்றோம்.
முதலாம் வருடத்தில் தமிழ்மொழி மூலம் கற்கையை தொடர்ந்து தேசிய தொழிற்றகமை மட்டம் 6 செயற்றிட்டத்துக்கு அமைவாக இரண்டாம் வருடத்தில் ஆங்கிலமொழி மூலத்தில் கற்கையை தொடரும் இரண்டாம் வருட மாணவர்களின் நிலைமை விரிவுரையாளர் பற்றாக்குறை, விரிவுரைகள் இடம்பெறாமை போன்ற பிரச்சினைகளால் மேலும் மோசமடையும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும், அரையாண்டுப் பரீட்சைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் குறித்த ஆறு மாத காலத்தினுள் முழுப்பாட நெறிகளையும் அதற்கான செய்முறை மற்றும் களப்பயிற்சியை நிறைவு செய்யவேண்டியுள்ள நிலையில் விரிவுரையாளர் பற்றாக்குறை சார்ந்த மேற்படி சிக்கல் நிலமைகளால் மீட்சியுறமுடியாத கட்டத்தை நாம் நெருங்கியுள்ளோம். இவ்வாறான நிலைமைகளில் அரையாண்டு பரீட்சைகளை எதிர்நோக்குவது பாரிய சவாலாக உள்ளதுடன், தேசிய தொழிற்றகைமை மட்டம் 6 இற்குரிய செயற்றிட்டங்களை முன்னெடுப்பதிலும் பாரிய நெருக்கடிகளை சந்திக்கின்றோம்.
இது இவ்வாறிருக்க, இலங்கை விவசாயக்கல்லூரிகளில் கல்வி கற்கும் மாணவர்களே விவசாய போதனாசிரியர்களாக வெளிவரும் நிலையில், வவுனியாவில் கற்கையை தொடரும் மாணவர்களும் குண்டசாலையில் தமிழ்மொழி மூலத்தில் கல்வியை தொடரும் மாணவர்களுமே இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் பிரதேசங்களில் கடமையாற்றும் விவசாயப் போதனாசிரியர்களாக நியமனம் பெறுவார்கள். இதன்படி பூரண களப்பயிற்சியை பெறாத மாணவர்களாக வெளியேறும் இந்நிலைமை வடக்கு, கிழக்கின் எதிர்கால விவிசாயத்தில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும் துரதிஷ்ட நிலைமையையே ஏற்படுத்தும் என்பதையும் நினைவுபடுத்துகின்றோம்.
இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் எடுத்து விரைவான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கோருவதுடன், விவசாயக்கல்லூரியில் கல்வி கற்று இன்று ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் கரிசனையுடன் செயற்படுவார் என்று எதிர்பார்க்கின்றோம். இது தொடர்பில் ஜனாதிபதிக்கும் உத்தியோகபூர்வமாக தெரியப்படுத்தவுள்ளோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
7 hours ago