2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு

Sudharshini   / 2015 ஜூன் 01 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மற்றும் யாழ் மாவட்டங்களை சேர்ந்த 85 பயனாளிகளுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (31) மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை, மன்னார் பேராலய பங்கின் துணை பங்குத்தந்தை, வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோநோகராதலிங்கம், மன்னார் நகரசபையின் முன்னாள் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், முன்னாள் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ், முன்னாள் உறுப்பினர் இ.குமரேஸ், வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சின் செயலாளர் .எஸ்.சத்தியசீலன் , மன்னார் நகரசபையின் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .