2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

காடுகளைப் பாதுகாத்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

George   / 2015 ஜூலை 18 , மு.ப. 08:31 - 1     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

காடுகளைப் பாதுகாத்தல் மற்றும் மரங்களை நாட்டுதல், காடுகளை வளர்ப்பதனூடாக இயற்கை சமநிலையினைப் பேணுதல் உட்பட விடயங்களை உள்ளடக்கிய விழிப்புணர்வு கருத்தரங்கு, கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலயத்தில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்றது.

பாடசாலை ஆசிரியர் எஸ்.கதிர்மகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட வனவள அதிகாரி நடராசா செல்வநாயகம், மாணவர்கள் மத்தியில் காடுகளைப் பாதுகாத்தல் தொடர்பாக விழிப்புணர்வு உரையினை ஆற்றினார்.

இந்நிகழ்வில் கரைச்சி பிரதேச வனவள அதிகாரி ஏ.ஏ.ரி.எம்.அமரசிங்கா மற்றும் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பெருமளவு காடுகள் அழிக்கப்பட்டுவரும் நிலையில் கிளிநொச்சி மாவட்ட வனவளத் திணைக்களம் காடுகளைப் பாதுகாப்பது தொடர்பாக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வுச் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 1

  • பிரகாஷ் Saturday, 27 July 2019 07:27 AM

    தீவிர காடு வளர்ப்பு கட்டுரை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .