2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

உவர்ப்பரம்பலை தடுப்பதில் சிக்கல்

Menaka Mookandi   / 2015 ஜூலை 26 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, பூநகரியில் உவர் பரம்பலைத் தடுப்பதற்கான உவர்த் தடுப்பணைகளை நிர்மாணிக்கும் பணிகள் முழுமை பெறாததன் காரணமாக உவர்பரம்பலை தடுப்பதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.

பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல கிராமங்கள், உவரடைந்து வருகின்றன. இந்நிலையில், உவரடைந்துவரும் பகுதிகளில் உதவி அமைப்புக்களின் உதவியுடன் உவர்த் தடுப்பணைகள் அமைக்கப்பட்டாலும் முக்கியமான இடங்களில் இதுவரை உவர்த்தடுப்பணை அமைக்கப்படாமலுள்ளது.

மழைக் காலத்தில் உவர்நீர் பெருமளவில் பரவக்கூடிய நிலைமை இருப்பதன் காரணமாக, உவர்த் தடுப்பணைகளை விரைவாக அமைக்குமாறு உவராபத்தினை எதிர்கொண்டுள்ள பூநகரி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மீள்குடியேற்றத்தின் பின்னர் பூநகரி பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம் என்பவற்றில் நடைபெற்ற கூட்டங்களில் உவராபத்துத் தொடர்பாக பல கிராமங்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

குறிப்பாக பூநகரி, கௌதாரிமுனையில் பெருமளவில் நடைபெறும் மணல் அகழ்வினால் கடல்நீர் கிராமங்களுக்குள் உட்புகக்கூடிய அபாயநிலைமை தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .