Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2021 நவம்பர் 24 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டத்தில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில், கடந்த 23 நாள்களில், 470 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட கொரோனா நிலைவரம் தொடர்பாக, இன்று (24), விடுத்துள்ள கொரோனா நிலைவர அறிக்கையிலேயே, இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், மன்னார் மாவட்டத்தில், நேற்று (23), மேலும் புதிதாக 14 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரை, 470 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும், அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago