Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 23 , பி.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
3 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கையை துவிச்சக்கரவண்டியில் சுற்றிவரும் சுற்றுப்பயணத்தை முன்னெடுத்து வரும் வவுனியாவைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன், 14ஆவது நாளான இன்று (23), ஹட்டனை வந்தடைந்தார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை, தனிப்பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும், லயன்களில் வாழும் மலையக மக்களுக்கு தனித்தனி வீடுகள் அமைத்து கொடுக்கப்படவேண்டும், தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றும் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் ஒரு நாள் அடிப்படை சம்பளம் வழங்கப்படல் வேண்டும் அகிய கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 10ஆம் திகதி, இந்தச் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தார்.
வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயம் முன்பாக, இச்சாதனை துவிச்சக்கரவண்டி பயணத்தை, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கொடி அசைத்து ஆரம்பித்து வைத்திருந்தார்.
இந்த துவிச்சக்கர வண்டிப்பயணம், 2,125 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்டமையவுள்ளதுடன், மார்ச் மாதம் 13ஆம் திகதி, யாழ். பல்கலைக்கழத்தில் நிறைவுறுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவைச் சேர்ந்த கலைஞரான த. பிரதாபன் ,கடந்த காலங்களிலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கையை சுற்றி மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்ததுடன், வட மாகாணத்தைச் சுற்றியும் துவிச்சக்கரவண்டியில் பயணித்திருந்தார்.
இவர் செல்லும் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் பலர் இவருக்கு ஆதரவு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025