Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூன் 07 , மு.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாட்டில் கல்வி பயிலத் திட்டமிடும் மாணவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற உதவும் பொருட்டு, சர்வதேச மாணவர் வங்கித் திட்டம் ஒன்றை HSBC ஆரம்பித்துள்ளது.
HSBC நடத்திய உலகளாவிய கல்வியின் பெறுமதி மதிப்பீடு மூலம் பெறப்பட்ட முக்கிய தகவல்களின் அடிப்படையிலேயே, சர்வதேச மாணவர் வங்கித் திட்டம் விருத்தி செய்யப்பட்டுள்ளது. கல்விப் போக்குகள், பிள்ளைகளின் கல்வி தொடர்பில் பெற்றோரின் நம்பிக்கைகளும் அச்சங்களும் கல்விக்கு நிதியளிப்பதில் அவர்களின் மனோபாவங்களும் நடத்தைகளும் மாணவர்களின் அனுபவங்கள் ஆகிய விடயங்கள் இந்த மதிப்பீட்டில் ஆராயப்பட்டன. உலகெங்கும் 15 நாடுகளிலுள்ள 10,400க்கு மேற்பட்ட பெற்றோரும் 1,500 பல்கலைக்கழக மாணவர்களும் இந்த மதிப்பீட்டில் கருத்து வழங்கினர்.
உலகளாவிய மதிப்பீட்டில் பெறப்பட்ட தரவுகள், இலங்கையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலமும் ஒவ்வொரு வருடமும் இலங்கையைச் சேர்ந்த 19,000க்கு மேற்பட்ட மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி கற்கிறார்கள் என ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளன. அவர்களில் பெரும்பான்மையானோர் HSBC வலுவான செயற்பாடுகளைக் கொண்டுள்ள அவுஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா, மலேசியா, பிரித்தானியா, இந்தியா ஆகிய நாடுகளிலேயே கல்வி பயில்கின்றனர்.
பெற்றோர் தமது பிள்ளைகளின் கல்வியைத் திட்டமிடும்போது, நான்கு முக்கிய கட்டங்களில் செயற்படுகின்றனர் என்பது மதிப்பீட்டின் மூலம் தெரியவந்துள்ளது. பிள்ளைகளின் உயர் கல்வி பற்றிக் கனவு காணுதல், அதற்காகத் திட்டமிடுதல், செயற்படுதல், வசதியை ஏற்படுத்துதல் என்பனவே, அந்த நான்கு கட்டங்களாகும். இதனை நன்கு உணர்ந்துகொண்டே, ஒவ்வொரு கட்டத்திலும் பெற்றோரினதும் மாணவர்களினதும் தேவைகளையும் ஈடுசெய்யும் விதத்தில் சர்வதேச மாணவர் வங்கிச் சேவைகள் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இலங்கை மாணவர்களுக்கு மிகவும் முக்கியமான நாடுகளில் HSBC கொண்டுள்ள வலுவான செயற்பாடுகளும், வங்கியின் அலைபேசி வங்கிச் சேவை வசதிகளான Global view, Global transfers என்பனவும், அவற்றைவிட முக்கியமாக, இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு முன்பே வெளிநாட்டில் இலவசமாகக் கணக்கை ஆரம்பிக்கும் வசதியும் (இதுவே சந்தையில் முதலாவது) HSBC யின் சர்வதேச மாணவர் வங்கிச் சேவைகள் திட்டததுக்கு மிகவும் சாதகமான விடயங்களாகும்.
48 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
53 minute ago