2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

‘பசு தாயையும்விட மேலானது’

Editorial   / 2017 மே 29 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பசுக்களை நம்பியே இந்த உலகில் மனித இனம் ஜனனித்துக்கொண்டிருக்கின்றது.  

ஓரிரு மாதங்கள் அல்லது இரண்டு வயதுவரை மட்டுமே, தாய்மார் சிசுவுக்கு தாய்ப்பால் ஊட்டுகின்றார்கள். 

மேலும், தாய்ப்பால் ஊட்டும் தாய்மாரின் விகிதம் சரிந்து கொண்டேயிருக்கின்றது. இதனால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, அதன் தாயாருக்கும் பாதிப்பு ஏற்படும் என்பது தெரிந்த விடயமே. 

எனவே, எமக்கு உயிரூட்டும் பசுக்களை வளர்ப்பதும் அன்புடன் ​அவைகளைப் பேணுவதும் நன்றி மறவாத எமது கடமையாகும். 

மனிதன் பிறந்தது முதல், பசுவின் உதிரத்தினுடான பாலை உடன் பருகி, உயிர்வாழும் மனிதன், இறுதித்தருவாயில் அவனது ஆன்மா சிரமமின்றிப் பிரிய பசுவின் பாலைத்தான் அவன் வாயில் பருக்குகின்றார்கள். பசு தாயையும்விட மேலானது. இதனை ஒரு விலங்காகக் கருதவேண்டாம்.

   வாழ்வியல் தரிசனம் 29/05/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .