2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அன்புக்கு அடித்தளம் நம்பிக்கை மட்டுமே

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 05 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நம்பிக்கையீனமான அன்பினால் உறவுகள் வலுப்பெறுவதில்லை. அன்புக்கு அடித்தளமும் உரமுமாக இருப்பது நம்பிக்கை மட்டும்தான். 

இன்று பலரும் ஏதோ ஒரு காரணத்தையிட்டு ஒருவருக்கு ஒருவர் அன்பு பாராட்டுவார்கள். ஒருவரிடம் உதவி பெற்ற பின்னர், அதன் பிரதியீடாக, நன்றி மறவாமல் அவருக்கு நன்மை செய்தல், பாராட்டுதலுக்குரியது.

ஆனால், உள்ளத்தில் கள்ளம் வைத்து, நடிப்புடன் காட்டும் பரிவு, பாசம் ஏற்றுக் கொள்ள முடியாத பாசாங்குதான். 

நாம் என்னதான் கர்வத்துடன் சுயமரியாதை எனும் பெயரில் எவரிடமும் பழகாது விலகி வாழ்ந்தாலும் அச்செயல் தன்னைத்தான் வருத்துவதாக அமையலாம்.

அன்புக்குப் பெறுமதிகூற முடியாது. ஆனால் அதனைப் பகிர்ந்து கொள்வதோ மிகவும் இலகுவானது. இதன் சக்தியும் அபாரம்.உலகமே இதனுள் அடக்கம். 

 

வாழ்வியல் தரிசனம் 05/04/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .