2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

அரசியல் பொழுதுபோக்கு அல்ல

Princiya Dixci   / 2017 மார்ச் 28 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதவிக்காகக் கைகோர்ப்பார்கள்; பின்னர் பதவிகளைக் கைப்பற்ற முடியாது விட்டால், பதவிகளைப் பெற்றவர்களுடன் நாடாளுமன்றத்தில் கைகலப்பில் ஈடுபடுவார்கள்.

இந்த அரிய காட்சிகளைத் தொலைக்காட்சியூடாகப் பார்க்கும் மக்கள் தலையில் கைவைப்பார்கள்; ஆனாலும் இரசிப்பார்கள். 

இதில் வேடிக்கை என்னவெனில், இவர்கள் எல்லாம் ஒழுக்கம் பற்றியெல்லாம் மக்களுக்குப் பாடம் கற்பிப்பார்கள். இந்தப் போலி அரசியலை, அரசியல்வாதிகளை மக்கள் அடிக்கடி உருவாக்கி ஏமாந்து போய்விடுவார்கள்.

இன்னமும் அரசியலில் விழிப்புநிலை உருவாகவில்லை. ஒழுக்கம் சார்ந்த அரசியல் மனப்பாங்கு இல்லாதவரை எந்த நாடும் உருப்படப் போவதில்லை. 

பிரச்சினைகளைத் தீர்க்கும் துணிச்சல் இல்லாதவர்களைப் பொதுமக்கள் தூக்கி எறிய வேண்டும். அரசியல் பொழுதுபோக்கு அல்ல; மக்கள் வாழ்வின் ஆதாரம்.

முன்னேற்றம், நல்ல அரசியலால்த்தான் உருவாகும். 

 

வாழ்வியல் தரிசனம் 28/03/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X