2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

இது ஓர் உண்மைக்கதை

Editorial   / 2017 ஒக்டோபர் 02 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இது எனது பாட்டனார் பற்றிய உண்மைக்கதை. என் தந்தை எனக்குச் சொன்னது. எங்கள் பாட்டனார் வசதியாக வாழ்ந்தவர். பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த குடும்பம். அவருக்கு வயோதிபம் வந்துவிட்டது. எனவே, பற்கள் எல்லாம் விழுந்து விட்டன. ஆனால், ஒரே ஒரு பல் மட்டும் வைரம் போல் உறுதியாக இருந்தது.  

அப்போது அவர் சொல்வாராம், “இந்த ஒரு பல் விழுந்தவுடன் நான் இறைவனிடம் போய் விடுவேன்” என்று. ஆனால், அதனைக் கேட்ட பிள்ளைகள் அப்படி சொல்லக்கூடாது என்பார்களாம்.  

ஒரு நாள் அவர் தனக்குச் சொந்தமான, அடுத்த ஊரில் உள்ள ​வீட்டுக்குச் சென்று வேலை செய்த போது, கையில் உள்ள சுத்தியல் கழன்று அவர் முகத்தில் பட, இதுவரை இருந்த பல் கழன்று விட்டது. உடனே அதனைத் தனது கையில் பொத்தி வைத்துக் கொண்டு, வீட்டுக்கு உடனே சென்றார். மனைவியை அழைத்தார். கையில் உள்ள பல்லைக்கொடுத்து, “உனது மடியில் உறங்கப்போகிறேன்” என்றபடி மனைவியின் மடியில் உறங்கினார். அப்புறம் அவர் விழிக்கவே இல்லை.  

இது எனது பாட்டனார் பற்றிய உண்மைக்கதை. என் தந்தை எனக்குச் சொன்னது. எங்கள் பாட்டனார் வசதியாக வாழ்ந்தவர். பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த குடும்பம். அவருக்கு வயோதிபம் வந்துவிட்டது. எனவே, பற்கள் எல்லாம் விழுந்து விட்டன. ஆனால், ஒரே ஒரு பல் மட்டும் வைரம் போல் உறுதியாக இருந்தது.  

அப்போது அவர் சொல்வாராம், “இந்த ஒரு பல் விழுந்தவுடன் நான் இறைவனிடம் போய் விடுவேன்” என்று. ஆனால், அதனைக் கேட்ட பிள்ளைகள் அப்படி சொல்லக்கூடாது என்பார்களாம்.  

ஒரு நாள் அவர் தனக்குச் சொந்தமான, அடுத்த ஊரில் உள்ள ​வீட்டுக்குச் சென்று வேலை செய்த போது, கையில் உள்ள சுத்தியல் கழன்று அவர் முகத்தில் பட, இதுவரை இருந்த பல் கழன்று விட்டது. உடனே அதனைத் தனது கையில் பொத்தி வைத்துக் கொண்டு, வீட்டுக்கு உடனே சென்றார். மனைவியை அழைத்தார். கையில் உள்ள பல்லைக்கொடுத்து, “உனது மடியில் உறங்கப்போகிறேன்”. என்றபடி மனைவியின் மடியில் உறங்கினார். அப்புறம் அவர் விழிக்கவே இல்லை.  

     வாழ்வியல் தரிசனம் 02/10/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்

  Comments - 0

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .