2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

கண்டதையும் கேட்பதே பாவம்

Princiya Dixci   / 2017 மார்ச் 01 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிகநெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் ஏதோ காரணங்களுக்காகப் பிரிந்துபோன பின்னர், தங்களுக்கிடையே பரிமாறப்பட்ட அந்தரங்கமான, பிறரைப் பாதிக்கக் கூடிய விடயங்களைப் பகிரங்கப்படுத்துவது தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்ளும் காரியங்களாகும்.

என்னதான் மனிதர்கள் நட்புப் பாராட்டினாலும் சிலரின் மிருககுணம் ஏதோ சந்தர்ப்பத்தில் வெளிக்கிளம்புகின்றது. எங்களால் நம்பமுடியாத நபர்களே துரோகிகளாகி விடலாம்.

எனவே, எக்காரணம் கொண்டும் சொல்லக்கூடாத சங்கதிகளை எவரிடத்தும் பகர்தல் ஆபத்ததானது என அறிந்து கொள்ள வேண்டும்.

அடிக்கடி மாறும் மனித மனம் சலனப்பட்டால் எல்லாமே நடக்கலாம். அதற்காக எவரிடத்தும் சந்தேகப்படுதலோ அல்லது என்றும் எச்சரிக்கையுடன் வாழ்தல் என்று பொருள்படக்கூடாது.

எவரேயாயினும் அவர்களிடம் சொல்லக்கூடாத இரகசியங்களைச் சொல்வது தர்மம் அல்ல. கண்டதையும் கேட்பதே பாவச் செயல்தான்.

நற்காரியங்கள் செய்வதைவிடத் துர்க்காரியங்களைக் கண்டு கொள்ளற்க.

வாழ்வியல் தரிசனம் 01/03/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X