Princiya Dixci / 2017 பெப்ரவரி 22 , மு.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பௌர்ணமி நள்ளிரவில் பால் நிலவுஒளிரும் காலத்தில் சிறுகுடிசையில் சிவந்த நிறத்துடன் பிறந்தேன் நான்.
எவருக்குமே இல்லாத புதுவடிவத்துடன் எனது ஆன்மா உடை உடுத்துக் கொண்டது.
எனக்கு மட்டுமா புதுப்புது வடிவங்கள்? இந்த அவனியில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் எவருக்குமே கிடைத்திடாத வடிவங்கள்தான் ஒவ்வொன்றுக்கும் அமைந்து விடுகின்றன.பராயங்கள் மாறிக்கொண்டே இருக்க, அவரவர்களின் வடிவங்களும் மாறியபடியே... மாறியபடியே...!
எனவே, நாங்ககள் எல்லோருமே பெருமைப்பட்டுக் கொள்வோமாக! கிடைத்தற்கரிய உருவங்களை மனிதன் மட்டுமல்ல, எல்லோருக்குமே கிட்டுகின்றன. எனவே பேதம் என்ன மானிடர்களே?
இதில் அழகு பற்றிய பிரச்சினைகளே அர்த்தமற்றது. எல்லா வடிவங்களையும் கௌரவப்படுத்துக! போற்றிடுக. ஆண்டவனின் படைப்புகள் அர்த்தம் நிறைந்தவை என உணர்வோம்.
வாழ்வியல் தரிசனம் 22/02/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .