Princiya Dixci / 2017 மார்ச் 20 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச திணைக்களத்துக்கு மக்கள் சேவைகளைப் பெறச் செல்லும்போது சில சகிக்க முடியாத அனுபவங்களைப் பெறுவதுண்டு. ஆர்வத்துடன் செல்லும் ஒருவர், தனக்குத் தேவையான விவரங்களை அறிய முடியாமல் மனவருத்தத்துடன் திரும்புவதுண்டு.
ஒருவாறு பிரயாசைப்பட்டு, அவரது அலுவல் தொடர்பான அலுவலரிடம் சென்று உதவிகளைக் கோரும்போது, சம்பந்தப்பட்ட கோவை மிக அருகிலேயே இருக்கும்போது, அதனை எடுத்து விரித்துப் படிக்கச் சோம்பல்பட்டு, “அது இங்கே இல்லை” எனச் சர்வசாதாரணமாகச் சொல்வதுண்டு. இதனைக் கேட்டால், வந்திருக்கும் பொது மகனுக்கு எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும் என்பதை அந்த அலுவலர் உணருவதேயில்லை.
பராமுகமும் சோம்பேறித்தனமும் கொண்டவர்கள் புனிதமான சேவைக்கு உகந்தவர்களேயல்லர். தங்களது சொந்த விடயங்களை உற்சாகமாகச் செய்பவர்கள் பிறர் கருமங்களை உதாசீனம் செய்வது ரொம்பவும் அநியாயமாகும்.
வாழ்வியல் தரிசனம் 20/03/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
3 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
13 Apr 2026