2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

‘விதி எதுவும் செய்யும்’

Editorial   / 2017 ஜூன் 02 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமணமாகாத ஒருவன் விபசாரி ஒருத்தியிடம் செல்ல நேரிட்டுவிட்டது. இளமைத் துடுக்கினால் அது தவறு என்று அவனுக்குப் புரியவில்லை. அதனால், அவளைச் சந்தித்ததில் இருந்து அவளிடம் பிரேமை கொண்டுவிட்டான்.  

அவளது வாழ்க்கை, குடும்பநிலை, அவள்பால் ஈர்த்துவிடவே, அவளிடம் “நான் உன்னைத் திருமணம் செய்கின்றேன்” எனச் சொல்லிவிட்டுச் சென்றான்.  

தனது முடிவைத் தனது ஆசானிடம் சொன்னான். அவரோ, “உனது தியாக மனப்பான்மை எனக்குப் பிடித்திருக்கின்றது. ஆனால், உனது மனோநிலை தடுமாறுமா என எனக்குத் தெரியாது. எதற்கும் மூன்றுமாத கால அவகாசம் எடு; அப்புறம் அவளைத் திருமணம் செய்யப் பிரியப்பட்டால் திருமணம் செய்” என்றார். 

மூன்று மாதம் முடிந்ததும், அவ​ன் அவளைத் திருமணம் செய்துகொள்ளத் தேடினான். அவள் அந்த விபசார விடுதியில் இல்லை.

எப்படியோ அவளைத் தேடிக் கண்டு கொண்டான். ஆனால், அவளோ சந்நியாசியாகி விட்டாள். “உன்னைக் கண்டதுமே, நான் தொழிலை விட்டுவிட்டேன்; உன்னை எதிர்பார்த்திருந்தேன். நீ வரவில்லை. இன்று நான் துறவியாகி விட்டேன். இந்த வாழ்வு எனக்குப் பிடித்திருக்கின்றது. போய்விடு” என்றாள். விதி எதுவும் செய்யும்; எதிர்பார்ப்புகளை மாற்றிவிடும்.  

வாழ்வியல் தரிசனம் 02/06/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X