2025 டிசெம்பர் 08, திங்கட்கிழமை

'நடிப்பின் துடிப்பு அடங்கி விடும்'

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 26 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பழங்களின் சுவை, தேனின் இனிமையை எவருமே அதுபோல் செயற்கையாகச் செய்ய முடியுமா? முடியாது. இயற்கையின் வலுவை மனிதனால் உருவாக்க இயலாது. 

செயற்கைப் பொருட்கள் போலியானவைதான். ஆனால், மனிதனால் அவைகளில் இருந்து மீளமுடியவில்லை.

இயல்பாகவே துஷ்டகுணத்துடன் நடப்பவர்கள், நல்ல மனிதன் போல் வேடமிட்டாலும் அது எடுபடாது. தகுந்த நேரத்தில் நடிப்பின் துடிப்பு அடங்கி விடும்.

நாம் வாழும் பூமியில் எல்லாத் தரத்தினர்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்குள் எவர் நல்லவர்? எவர் கெட்டவர் எனப் புரியாமல் திணறும் மக்கள் அனேகர்.

யாரோ ஓரிரு துஷ்டர்களால் முழு உலகையும் எடை போடக் கூடாது. அறிவு அனுபவங்களினூடாக எம்மை நாம் தெளிவு படுத்தியே தீரவேண்டும். உலகம் ஒரு பரிசோதனைக் கூடமும் அல்ல; நிமிர்ந்து நில்லுங்கள், தீயோர் நிழலும் தீண்டாது.  

 

வாழ்வியல் தரிசனம் 26/04/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X