Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார்
1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர்.
போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த சீன அரசு தியானன்மென் சதுக்கத்தை பீரங்கிகளால் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
இந்த விவகாரம் உலகளவில் பெரும் அதிரவலைகளை ஏற்படுத்தியது. அரசின் இந்த தாக்குதலால் சீனாவே அச்சத்தின் மூழ்கியது. இதனை அடுத்து மிகப்பெரிய போராட்டத்தை அடக்கிய பீரங்கிகள் யாருமில்லா சாலையில் அணிவகுத்து சென்றுகொண்டிருந்தன.
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக கையில் ஒரு காய்கறி கூடையுடன் சென்ற ஒரு சாமனியர், பீரங்கிகளின் முன் நின்று வழியை மறித்தார்.எத்தனை பேரைக் கொன்றாலும் எதிர்த்து நிற்க யாராவது வருவார்கள் என சொல்லாமல் சொல்லிய அந்த பாமரனின் புகைப்படத்தை அமெரிக்க பத்திரிகையாளர்கள் புகைப்படங்களாக எடுத்தனர்.
உலக அளவில் வைரலாக பரவிய அந்த திரைப்படம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. பல பத்திரிகைகளும் கட்டுரைகள் எழுதின. பீரங்கியை வழிமறித்தவர் யார்? அவர் என்ன ஆனார்? என்பது எதுவுமே தெரியாத நிலையில் அவருக்கு பீரங்கி மனிதன் என பத்திரிகைகள் பெயரிட்டன.
அந்த புகைப்படத்தை தன் கேமராவுக்குள் கொண்டு வந்த உலகறிய செய்த ஒரு ஊடகவியலாளர் சார்லி கோல் கடந்த 5ம் திகதி காலமானார்.
இந்தோனேஷியாவில் வசித்து வந்த அவர் தனது 64 வயதில் மறைந்தார். அவர் மறைந்தாலும் அவர் எடுத்த வரலாற்று சிறப்புமிக்க புகைப்படம் காலம் கடந்து பேசும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
27 minute ago
2 hours ago