2025 நவம்பர் 25, செவ்வாய்க்கிழமை

மூத்த ஊடகவியலாளர் ஜனதாஸ பீரிஸ் காலமானார்

A.P.Mathan   / 2013 மார்ச் 17 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரும் அரசியல் ஆய்வாளருமான ஜனதாஸ பீரிஸ் இன்று காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 71. சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதே இன்று அவர் காலமானார்.

1960ஆம் ஆண்டு காலப்பகுதியில் “சோவியத் தேஸய” என்னும் பத்திரிகையின் ஆசிரியராக தனது ஊடக அறிமுகத்தை மேற்கொண்ட ஜனதாஸ பீரிஸ், பிற்காலத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் லேக்ஹவுஸ் நிறுவனம் போன்றவற்றின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் விவகாரங்களை தெளிவாக அலசுவதில் புகழ்பெற்றிருந்த ஜனதாஸ, ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு பொதுச் செயலாளராகவும் ஊடக அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். 2004ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இவர் நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X