Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Ilango Bharathy / 2021 ஜூலை 16 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிலிப்பைன்ஸைச் சேர்ந்த பிரபல பாம்பு நிபுணரான பெர்னாடோ அல்வாரெஸ் என்பவர் நாகபாம்பொன்றை முத்தமிட முயன்றபோது அப் பாம்பு தீண்டியதில் உயிரிழந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
62 வயதான குறித்த நபர் மங்கால்டான் என்ற பகுதியில் கடந்த 9ஆம் திகதி குறித்த பாம்பைப் பிடித்துள்ளார். இந்நிலையில் தனக்கு பாம்பின் விஷத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனக் கூறிவந்த அவர், அண்டை வீட்டார் முன்னிலையில் அப்பாம்பை முத்தமிட முயன்றுள்ளார்.
இதன்போது அப்பாம்பானது அவரது நாக்கில் தீண்டியுள்ளது. இதனால் மயக்கமுற்ற அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் முயன்றபோதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அண்டை வீட்டார் அப்பாம்பை அடித்துக்கொன்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
03 May 2025
03 May 2025