Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 மார்ச் 21 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெங்களூரு கிரிநகர் பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட பி.டி.ஏ. லே-அவுட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் ஜன்னல் கதவை திறந்து வைத்து கொண்டு லூட்டி அடித்ததுடன், கிளுகிளுப்பான உரையாடலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. தம்பதியின் களியாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்துள்ளது. காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு தம்பதி பேசிய ஆபாச பேச்சுகளால், பக்கத்து வீட்டு பெண் தனது வீட்டின் முன்பகுதிக்கு செல்ல முடியாத அளவுக்கு தொல்லையை அனுபவித்து வந்துள்ளார்.
தம்பதியின் களியாட்டத்தை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த பெண் பொங்கி எழுந்து, நேரடியாக தம்பதியிடமே இதுபற்றி கூறியுள்ளார். அதாவது படுக்கை அறையில் உள்ள ஜன்னல் கதவை அடைத்து விட்டு நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள் என அவர் கூறியுள்ளார்.
ஆனால் அந்த பெண்ணின் வார்த்தைகளை அந்த தம்பதி ஒரு பொருட்டாக கண்டுகொள்ளவில்லை. தினந்தோறும் தம்பதி தங்களது பாணியிலேயே மன்மத லீலையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதன் காரணமாக அடிக்கடி தம்பதி மற்றும் பெண் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது அந்த பெண்ணுக்கு தம்பதி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கிரிநகர் பொலிஸ் நிலையத்தில் அந்த பெண், தம்பதி மீது ஒரு புகார் அளித்துள்ளார்.
அதில், தம்பதி தனது வீட்டின் படுக்கை அறை ஜன்னல் கதவை திறந்து வைத்து உல்லாசம் அனுபவிக்கிறார்கள். அது தனக்கு முகம் சுளிப்பை தருகிறது. நான் பல முறை கூறியும் கேட்பதில்லை. மாறாக தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கூறி இருந்தார். இந்த விசித்திரமான புகாரை கேட்ட பொலிஸார் ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டனர். பின்னர் புகாரை பெற்றுக்கொண்ட பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
பெங்களூருவில் ஏற்கனவே வளர்ப்பு நாய்கள் தொடர்பாக பொலிஸில் புகார்கள் சென்றுள்ளன. மேலும் பக்கத்து வீட்டுக்காரர் வளர்க்கும் கோழியால் பிரச்சினை என பொலிஸில் புகார் கொடுத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. ஆனால் தற்போது தம்பதி மீது பக்கத்து வீட்டு பெண் கொடுத்துள்ள புகார் கொஞ்சம் வினோதமானது. இது பேசும் பொருளாகி வருகிறது.
32 minute ago
48 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
48 minute ago
1 hours ago
1 hours ago