Editorial / 2026 ஏப்ரல் 01 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலை உயர்வு காரணமாக ஆணுறைகளின் விலையும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆணுறை தயாரிப்பில் முக்கிய பொருட்களாக உள்ள சிலிகான் எண்ணெய் பற்றாக்குறை மற்றும் அமோனியா விலையேற்றம் பெரிய சவாலாக மாறியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக செங்கடல் வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இது ஆசியாவிலிருந்து ஐரோப்பாவிற்குச் செல்லும் மருத்துவப் பொருட்களின் வரவை தாமதப்படுத்துகிறது.
ஆணுறை தயாரிப்புக்குத் தேவையான இயற்கை லேடெக்ஸ் பெரும்பாலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து பெறப்படுகிறது. இருப்பினும், சுத்திகரிப்பு மற்றும் லூப்ரிகண்டுகளுக்குத் தேவையான சிலிகான் எண்ணெய் மற்றும் அம்மோனியா போன்ற ரசாயனங்களின் விலை சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது.
உற்பத்திச் செலவு அதிகரிப்பதால், முன்னணி நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் விலையை 10% முதல் 20% வரை உயர்த்தக்கூடும் என சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
விலை உயர்வு அல்லது தட்டுப்பாடு காரணமாக மக்கள் ஆணுறை பயன்பாட்டைக் குறைத்தால், அது திட்டமிடப்படாத கருத்தரிப்பு மற்றும் பால்வினை நோய்கள்) பரவுவதற்கு வழிவகுக்கும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
24 minute ago
46 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
46 minute ago
56 minute ago
1 hours ago