Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Super User / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
14 வயதில் ஒரு குழந்தைக்குத் தந்தையான சிறுவனின் கல்வி எதிர்காலம் குறித்து அவனின் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனைச் சேர்ந்த நேதன் பிஷ்போர்ன் எனும் 14 வயதான சிறுவன் 14 வயது சிறுமியான ஏப்ரல் வெப்ஸ்டர் பெண் குழந்தைக்கு தந்தையாகவுள்ளான்.
நேதனும் ஏப்ரல் வெப்ஸ்டரும் பிரிட்டனில் மிக இளமையான பெற்றோர்களாக உள்ளனர். இந்த ஜோடியின் மகள் ஜெமிக்கு இப்போது ஒரு மாத வயதாகிறது.
இந்நிலையில் தனது மகனின் எதிர்காலம் குறித்து நேதன் பிஷ்போர்னின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
'பாடசாலையில் வகுப்புகள் நடைபெறாத வேளைகளில் நேதன் தனது காதலியையும் மகளையும் பார்ப்பதற்காக அவளின் வீட்டிற்குச் சென்றுவிடுவான். இரவு 9 மணிக்குப் பின்னர்தான் எமது வீட்டுக்கு வருவான். இவ்விடயத்தில் நான் மகிழ்ச்சியாக இல்லை. அவனின் கல்வி குறித்து கவலைகொண்டுள்ளேன்' என நேதனின் தந்தை ரொன் பிஷ்போர்ன் (53) தெரிவித்துள்ளார்.
தனது மகன் விரைவில் மற்றொரு குழந்தைக்கு தந்தையாக மாட்டான் என நம்புவதாக நேதனின் தாய் ஜூலி (43) கூறியுள்ளார்.
ஏப்ரல் வெப்ஸ்டர் தற்போது இளம் தாய்மார்களுக்கான பாடசாலையொன்றில் 10 ஆம் ஆண்டில் கல்வி பயின்றுவருகிறாள் அவளின் தாய் மரியா 36 வயதிலேயே பாட்டியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனது மகள் மிகச்சிறிய வயதிலேயே தாயாகியமை தனக்கு அதிர்ச்சியளித்த போதிலும் குழந்தை ஜெமி தமது குடும்பத்தின் ஓர் அங்கமாகிவிட்டதாக மரியா கூறியுள்ளார்.
அதேவேளை, ஏப்ரலின் தந்தை ஜெவ் (38) தனது மகள் குறித்து உள்ளுர்வாசிகள் சிலர் குரூரமாக பேசுவதையிட்டு விசனம் தெரிவித்துள்ளார். எமது மகள் கார்பெல்லி பிரதேசத்திற்கே அவமானத்தை ஏறு;படுத்தியதாக சிலர் கூறுகின்றனர். இது மிகவும் வேதனையானது என அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago