Editorial / 2025 மார்ச் 30 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒரு பெண்ணை திருமணம் முடித்துக்கொண்டு நிம்மதியாக வாழ முடியவில்லை என பலரும் புலம்புவதை கேள்விப்பட்டிருக்கின்றோம். அதேபோல, ஏன்டா இந்த திருமண வாழ்க்கை தனியாக நிம்மதியாக இருந்திருக்கலாம் என பெண்கள் கூறுவதையும் கேள்விப்பட்டிருப்போம். இவ்வாறான நிலையில், இரண்டு ஆண்களை பெண்ணொருவர் திருமணம் முடித்துள்ள சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் 2 தாலிகள் கட்டிக்கொண்டு 2 கணவர்களுடன் வாழ்வதாக கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தர பிரதேசம் தியோரியா பகுதியை சேர்ந்த அந்த இளம்பெண் கழுத்தில் 2 தாலிகள் அணிந்திருக்கிறார். 3 பேரும் ஒன்றாக வாழ்கின்றனராம்.
இதுகுறித்து அந்த பெண் கூறுகையில்,
ஒரு தாலி ஒரு கணவருக்காகவும், மற்றொரு தாலி இன்னொரு கணவருக்காகவும் அணிந்துள்ளேன். நாங்கள் 3 பேரும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறோம். 3 பேரும் எங்கு சென்றாலும் ஒன்றாகத்தான் செல்வோம், சேர்ந்து சாப்பிடுவோம், சேர்ந்து தூங்குகிறோம். 2 கணவர்களுடனும் நேரத்தை திறம்பட நிர்வகிக்கிறேன் என கூறியுள்ளாராம் அந்த பெண்.
இந்த நிலையில் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி 2 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
36 minute ago
47 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
47 minute ago
54 minute ago
1 hours ago