Gavitha / 2015 ஜனவரி 27 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

வாகன தரிப்பிடத்துக்காக பெண்ணொருவர் 18,500 பவுண்ட்களை கட்டணமாக செலுத்திய விபரீத சம்பவமொன்று ஸ்கொட்லாந்தின் மிகப்பெரிய நகரமான, டண்டீ நகரத்தில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி பகுதியைச் சேர்ந்த கார்லி மார்க்கி என்ற 26 வயது பெண்ணொருவர், தனது சொந்த வாகனத் தரிப்பிடத்தில் வாகனத்தை நிறுத்தாமல், பாதையில் நிறுத்தி வந்துள்ளார்.
பாதையில் வாகனத்தை நிறுத்தியதன் காரணமாக, அவருக்கு ஒவ்வொரு நாட்களுக்குமான கட்டணப்பட்டியல் அவரது கார் கண்ணாடியின் வெளிப்புறத்தில் ஒட்டப்பட்டிருந்தது.
இதனை பெரிதாக நினைக்காது அவர் தனது செயற்பாட்டை தொடர்ந்து வந்தார். இவர், ஒரு வருடம் வாகன தரிப்பிடத்துக்கான கட்டணத்தை செலுத்தாத காரணத்தால், மொத்தமாக 18,500 பவுண்ட்களை செலுத்துமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சட்ட ஒழுங்கு விதிகளை மீறியமை, அன்றாட கட்டணங்களை செலுத்தாமை போன்றவற்றுக்கே இக்கட்டணங்கள் அறவிடப்பட்டதாக, உரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எமது வீட்டுக்கு முன்பாக எமது உடமைகளை வைப்பதற்கு சட்டத்தில் இடமுண்டு என்று குறித்த பெண் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 minute ago
23 minute ago
32 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
23 minute ago
32 minute ago
36 minute ago