Kogilavani / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

மனிதம் மரணித்த இவ் உலகில், வன்மம் தலைத்தோங்கிய மனிதர்களே எங்கும் வியாபித்துள்ளனர் என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.
கரடியொன்றின் மீது காரை, ஏற்றி அதனை வன்புணர்வு புரிய முயன்ற மூவரை ரஷ்ய பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
வீடியோ ஒன்றின் மூலம் கிடைக்கபெற்ற ஆதாரத்தை வைத்தே மேற்படி மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வீடியோவில், ஜுப் வண்டியின் நான்கு சில்லுகளுக்கு நடுவில் கரடியொன்று அகப்பட்டுள்ளது. ஜுப் வண்டிக்குள் இருந்த மூவரும் குறித்த வண்டியை செலுத்தாது கரடியின் மீது வண்டியை மேலும் கீழுமாக அசைத்த வண்ணமுள்ளனர்.
வண்டியின் சில்லுகளுக்குள் இருந்து கரடி போராடி வெளியேவந்தாலும் அதனது ஒரு கால்மட்டும் மீண்டும் சில்லுக்குள் மாட்டிகொண்டது. இதற்கிடையில் ஜுப்புக்குள் இருந்த ஒருவன் கரடியை எழும்பவிடாது கதவைத்திறந்து அதனை காலால் உதைக்கின்றான்.
தனது அயராத முயற்சியால் அவனது பிடியிலுமிருந்து வெளியே வந்த கரடி, கத்தியவாறு தப்பி ஒட அதனை மற்றுமொரு வாகனத்திலிருந்தவர்கள் வீடியோவாக பதிவுசெய்கின்றனர்.
இக்காட்சிகளடங்கிய வீடியோவை மேற்படி மூவரதும் நண்பியொருவர் சமூகதளங்களில் பதிவேற்றியதால் இச்சம்பவம் குறித்த செய்தி எங்கு பரவத்தொடங்கியது.
மிருகவதை சட்டத்தின் கீழ் கைதான இவர்களுக்கு, 6 மாத சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
8 minute ago
24 minute ago
33 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
24 minute ago
33 minute ago
37 minute ago