A.P.Mathan / 2012 நவம்பர் 14 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
அணியில் மாற்றங்களும் இடம் பெற்றுள்ளன. அது மட்டுமல்லாமல் இந்த தொடரும் மாற்றங்களை தரப்போகின்றது என்ற எதிர்பார்ப்புக்கள் இருக்கின்றன. குறிப்பாக மூவர் செய்து காட்ட வேண்டிய நிலையில் உள்ளனர். இல்லாவிட்டால் இவர்களின் இடம் காலி என்ற நிலை. முதலாமவர் விரேந்தர் சேவாக். டோணிக்கும் இவர் மீது நம்பிக்கை இல்லாத நிலையில் இவரின் துடுப்பாட்டம் மிக மோசமாகவே இருந்து வருகிறது. அடுத்தவர் கெளதம் கம்பீர். இந்திய அணியின் நிச்சயமான வீரர் என்ற நிலையில் இருந்து வந்தவர். அவரின் நிலை இப்போது கேள்வியாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் செய்து காட்டினால் அணியில் இடம் உண்டு. இல்லாவிட்டால் இந்த தொடர் நடைபெறும் வேளையில் இவர்கள் இடம் பறிபோக வாய்ப்புக்கள் உள்ளன. மூன்றாமவர் சச்சின் டெண்டுல்கார். மிக பெரிய அழுத்தம் அவர் மீது இப்போது உள்ளது. இந்த தொடரில் ஒரு சதமாது இவர் அடிக்காவிட்டால் அடுத்த கட்டம் கேள்வியே. கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறும் நேரம் வரும் என்றே சொல்லலாம். மற்றவர்கள் மீது பெரியளவில் அழுத்தம் இல்லை. டோணி செய்து காட்ட வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலக வேண்டும் என்ற அழுத்தம் ஒன்று அவர் மீது இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய ஊடங்கள் இதில் அதிகம் அக்கறையாக இருக்கின்றனர். இந்த நிலையில் தொடரில் வெற்றி பெற வேண்டும். .jpg)
.jpg)



8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago