2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

ஆசிரியரை இடம்மாற்றக்கோரி போராட்டம்

Freelancer   / 2022 டிசெம்பர் 21 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநாச்சி இந்துக் கல்லூரிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட ஆசிரியரை இடம்மாற்றக் கோரி, மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஆகியோர் பாடசாலை நுழைவாயிலை மூடி, கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். 

கல்லூரியின்  ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் முகநூலில் பதிவுகளை இட்ட ஆசிரியரை இடம்மாற்றக் கோரி வலய  கல்வி பணிப்பாளர், மாகாண கல்வி திணைக்களம் ஆகியவற்றுக்கு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு வந்த  நிலையில், குறித்த ஆசிரியர் பாடசாலை அதிபருக்கு எதிராக நேற்று முன்தினம் (19) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததைக் கண்டித்து, நேற்று (20) காலை கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. 

சம்பவ இடத்துக்கு வந்த வலயக் கல்விப்  பணிப்பாளர், போராட்டக்காரர்களுடன்  கலந்துரையாடியதை அடுத்து, மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்பட்டதுடன் குறித்த ஆசிரியர், பொலிஸ் பாதுகாப்பில் அழைத்துச் செல்லப்பட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X