2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

பேபி செரமி நிறுவனத்தினால் கர்ப்பவதிகளுக்கான செயலமர்வு

Janu   / 2023 ஜூன் 27 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம்  தவசீலன்

அறுபது ஆண்டுகளாக சிறுவர்களுக்கான உற்ப்பத்தி பொருட்களை வழங்கி வரும்   பேபி செரமி நிறுவனத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் கர்ப்பவதிகளுக்கான விசேட விழிப்புணர்வு செயலமர்வு  ஒன்று இன்று(27) முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கர்ப்பவதிகளுக்கான குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை  (27) முல்லைத்தீவு கரைதுறைப்பற்று  பிரதேச சபை பொது மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது பல நூற்றுக்கணக்கான கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றிருந்தனர் இறுதியாக கலந்து கொண்ட கர்ப்பவதிகளுக்காக பேபி செரமி  நிறுவனத்தின் குழந்தைகளுக்கான பேபி செரமி நிறுவன தயாரிப்புகள் அடங்கிய பொதி  ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X